News January 2, 2026
பிக்பாஸ் ஃபைனல்.. TTF வின்னர் இவரா?

பிக்பாஸ் தமிழ் முடிவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், Ticket to Finale போட்டிகள் சூடுபிடித்துள்ளன. ஏழு டாஸ்க்கின் முடிவில் சபரி, சாண்ட்ரா, அரோரா முன்னிலை வகித்தனர். இறுதிக்கட்ட கார் டாஸ்க்கில் ஆரோரா, பார்வதி, கம்ரூதின் கடும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரோரா 2 புள்ளிகள் முன்னிலையுடன் இருப்பதால், அவர் TTF ஜெயித்து ஃபைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
டி20 WC பயிற்சி ஆட்டம்: தமிழக வீரர் அதிரடி சதம்!

2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரரான ஜெகதீசன் 49 பந்தில் சதமடித்து (104) அசத்தியுள்ளார். USA-வுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆயுஷ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி 238 ரன்கள் குவித்தது. ஜெகதீசனுக்கு உறுதுணையாக பதோனி (60*), திலக் வர்மா (38) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். கடின இலக்கை நோக்கி ஆடி வரும் USA அணி, 50 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
News February 2, 2026
வங்கி கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு

பிப்.15 முதல் விவசாயிகள் வங்கிக் கணக்கில் குறுவை நெல் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வரவு வைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புக்கு உள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரு வாரத்தில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
News February 2, 2026
SC விதிக்கு புறம்பாக தமிழக அரசு குழு அமைப்பு: R.N.ரவி

பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்க TN அரசு அமைத்துள்ள தேடுதல் குழு SC விதிக்கு புறம்பானது என R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். UGC பிரதிநிதியை தேடுதல் குழுவில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் UGC பிரதிநிதி இல்லாத, தேர்வுக் குழு பரிந்துரைக்கும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது எனவும் கூறிய அவர், UGC பிரதிநிதியை இணைக்கும் வரை தேடுதல் குழுவின் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தினார்.


