News October 11, 2025
பாளையங்கோட்டை சாலைக்கு புதிய பெயர் சூட்டல்

தமிழ் பேராசிரியர், தமிழறிஞர், எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்களை சிறப்பு செய்யும் வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் மரியா கேண்டீன் வரை அவர் பயின்ற பள்ளி கல்லூரி அமைந்துள்ள ஒரு கிலோமீட்டர் நெடுஞ்சாலைக்கு பேராசிரியர் தொ.பரமசிவன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெற்று திருநெல்வேலி மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
7வது முறையாக விருது பெறும் நெல்லை ரயில்

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏழாவது முறையாக சிறந்த பராமரிப்பு ரயில் என்ற விருதை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இதற்கான விருது இன்று (அக்.11) மதுரையில் மதுரை கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது, மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
News October 11, 2025
திருநெல்வேலி தீபாவளி சிறப்பு ரயில்

திருநெல்வேலி – செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே தீபாவளி பண்டிகைக்கு அடுத்த 2 நாட்கள் சிறப்பு ரயில் அறிவித்தது. தென்னக ரயில்வே அக்டோபர் 21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை வழியாக மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் சென்று சேருகிறது. *ஷேர் பண்ணுங்க
News October 11, 2025
நெல்லை: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மேலப்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட முகமது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதித்தார்.