News October 21, 2025
பால் நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையில்; நாளை அக்.22ம் தேதி புதன்கிழமை தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூடி அடுத்த போராட்ட தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News February 4, 2026
சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரி மனு

சேலத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் மக்கள் சந்திப்பிற்காக இரண்டு இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி மற்றும் மாநகர பகுதியில் சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு, மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் காவல்துறையினரிடம் மனு அளித்தார்.
News February 4, 2026
சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
மயிலாடுதுறை – சேலம் பயணிகள் கவனத்திற்கு

பராமரிப்புப் பணி காரணமாக, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811) பிப். 6, 10, 13 தேதிகளில் வீரராக்கியம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) அதே தேதிகளில் சேலம் – கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.


