News July 25, 2024

பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

image

அரியலூரில் உள்ள தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொள்முதல் செய்யப்படும் பால், சில்லரையில் விற்பனை செய்யப்படும் பால், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Similar News

News March 7, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

News March 6, 2026

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

image

வரும் (மார்ச்.8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில், (06.03.2026) இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

error: Content is protected !!