News January 27, 2026
பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது: பிரகாஷ் ராஜ்

இந்தி சினிமாக்கள் இப்போது மியூசியத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகள் போல் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். மேலும், பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை என்றும், ஆனால் ஜெய் பீம், மாமன்னன் போன்ற தென்னிந்திய படங்கள் மண்வாசனையோடு இன்னும் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன எனவும் பேசியுள்ளார்.
Similar News
News February 6, 2026
BREAKING: விஜய்க்கு எதிரான பரபரப்பு தீர்ப்பு

வரி ஏய்ப்பு செய்ததற்காக விஜய்க்கு விதித்த ₹1.50 கோடி அபராதத்தை சென்னை HC உறுதி செய்துள்ளது. புலி படத்திற்கு வாங்கிய ₹15 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என 2022-ல் ₹1.50 கோடியை IT அபராதமாக விதித்திருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை, ’அபராதம் விதித்ததில் தவறில்லை’ எனக்கூறி நீதிபதி தள்ளுபடி செய்தார். IT மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
உங்க ஆளுக்கு என்ன கலர் ரோஸ் கொடுக்கணும்?

காதலர் தின சீசன் தொடங்கிவிட்டது. முதல் நாளாக நாளை ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ரோஸுக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உள்ளது. அதுபோல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும். உங்கள் காதலரின் குணாதிசயத்திற்கு ஏற்றவாறு என்ன ரோஜாவை பரிசாக அளிக்கலாம் என்பதை உங்களுக்காக கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe பண்ணி தெரிஞ்சிக்கோங்க. நீங்க என்ன கலர் ரோஸ் கொடுக்க போறீங்க?
News February 6, 2026
லோன் வாங்கியவர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிக்கும் என்ற அவர், பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம், வீட்டு லோன் குறையும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


