News August 20, 2025

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அவசர அழைப்பு எண் 100-க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை செய்த போடு இது உறுதியானது. பின்னர் விருதுநகரைச் சார்ந்த கதிரேசன், மதுரையைச் சார்ந்த சூர்யா மற்றும் 3 பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 20, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக.19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 19, 2025

தூத்துக்குடி: கணவரை கண்டு இனி பயப்படாதீர்கள்

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தேனி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9578560948 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

தூத்துக்குடி – நாகை 312 கி.மீ நீள பசுமை பாதை

image

இன்று (19.8.2025) இந்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி-நாகை இடையே புதியதாக 312 கிலோ மீட்டர் நீளத்தில் பசுமை வழி நான்கு வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் என கூறப்பட்டு உள்ளது.

error: Content is protected !!