News March 25, 2025
பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.
Similar News
News March 26, 2025
திருவள்ளூர்: கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வித்துறையின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Pre-KG, UKG ஆகிய வகுப்புகள் உட்பட முதலாம் வகுப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 7-ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிந்தது. மேலும் மீதம் உள்ள இடங்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது .
News March 26, 2025
இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
News March 26, 2025
குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.