News January 21, 2025

பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆசிரியர் கைது

image

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு பள்ளி ஆசிரியரான சிவக்குமார் என்பவரை கைது செய்த நிலையில் வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கவும், பல்லடம் 4 வழிச்சாலை பணியில் சேதமான குடிநீர் குழாய்களை உடனே மாற்றவும், கிணறுகள்-நீர்நிலைகளை தூர்வாரி பழுதான குழாய் இணைப்புகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார்

News March 6, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 5, 2026

கோடைகால குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

error: Content is protected !!