News September 12, 2024
பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக்குழுமம் விசாரணை

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் 7ம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், அவர்கள் போக்சோ சட்டத்தில் நேற்று(செப்.11) கைது செய்யப்பட்டனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து நெல்லை குழந்தைகள் நலக் குழுமம் விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News July 4, 2025
நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள 36,000 தேர்வர்கள்

நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 12ஆம் தேதி நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 36 ஆயிரத்து 11 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையத்தின் நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்படும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.
News July 4, 2025
நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நாளை ஜூலை 5ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். *ஷேர் பண்ணுங்க
News July 4, 2025
நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.