News August 2, 2024
பாலியல் தொல்லையா? நீதிபதி அட்வைஸ்

இளம்பெண்களாகிய உங்களுக்கோ, அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கோ ஏதாவது பாலியல் ரீதியிலான சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாருக்கோ அல்லது நம்பிக்கையானவர்களிடமோ தைரியமாக தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிபதி அனுராதா அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதன்மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.
Similar News
News August 9, 2025
மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கியவரை திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 8, 2025
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️SP – 0452-2539477,0452-2539466
▶️ADSP – 9498102171, 9443175424, 9498154615
▶️மேலூர் (DSP) – 9498180078
▶️உசிலம்பட்டி (DSP) – 9442525524
▶️சமயநல்லூர் (DSP) – 9566129088
▶️பேரையூர் (DSP) – 6374643101
▶️திருமங்கலம் (DSP) – 9958380462
▶️திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
News August 8, 2025
மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.