News May 26, 2024

பாலியல் சீண்டல் செய்தவருக்கு குண்டாஸ்

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலக்கோட்டையை அடுத்த விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவரை கடந்த 3 ஆம் தேதி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் இவரது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 7, 2026

திண்டுக்கல்லில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு!

image

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முஹம்மது பாசில், மாநகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவ துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 6, 2026

திண்டுக்கல்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

திண்டுக்கல் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

திண்டுக்கல்: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

திண்டுக்கல் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!