News February 18, 2025

பாலத்திலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29) சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், நேற்று முன்தினம் மது போதையில் திண்டிவனத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள வாய்க்கால் பாலத்தின் தடுப்புக் கட்டை மீது அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததில் பாலாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். திண்டிவனம் போலீஸாா்  விசாரணை நடத்திற் வருகின்றனர்.

Similar News

News March 9, 2026

விழுப்புரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

மரக்காணம் அருகே தீ குளித்து தற்கொலை!

image

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சரண்யா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ குளித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!