News April 30, 2024

பாலக்கோடு: கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பணந்தோப்பு கிராமத்தில் நேற்று(ஏப்.29) ஜெய்கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கறவை மாடு தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கறவைமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 2, 2025

தர்மபுரியில் ஓர் குட்டி ஊட்டி!

image

தருமபுரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், 3000 அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. இது ‘ஏழைகளின் குட்டி ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் ரம்மியமான பயணத்தை அளிக்கும் இது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் மூலிகைச் செடிகள் நிறைந்தது. காபி, மிளகு சாகுபடி இங்கு பிரபலம். வியூ பாயிண்ட், வத்தல்மலை அருவி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இது ஒரு சிறந்த பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.

News November 2, 2025

தருமபுரி: இரயில்வே வேலை,ரூ.30 ஆயிரம் சம்பளம்!

image

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

News November 2, 2025

தருமபுரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!