News January 5, 2026

பார்வதி, கமரூதினுக்கு சம்பளம் இல்லையா?

image

சாண்ட்ராவை தாக்கியதால் <<18746829>>ரெட் கார்டு <<>>கொடுத்து வெளியேற்றப்பட்ட பார்வதி, கமரூதினுக்கு சம்பளம் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறியதற்காக ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு சம்பளமோ நிகழ்ச்சியில் வென்ற பரிசுப் பொருள்களோ எதுவும் கிடைக்காது என பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் ஃபைனல், கொண்டாட்டம் உள்ளிட்டவற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

Similar News

News February 2, 2026

தேர்தல் ரிசல்ட் பாஜகவுக்கு தெரியும்: ஜோதிமணி MP

image

மத்திய பட்ஜெட் முற்றிலும் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஜோதிமணி MP கூறியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து தான் தமிழகத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் TN எதிர்பார்த்த மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News February 2, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

image

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.

error: Content is protected !!