News April 16, 2025

பார்மஸிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி !

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் (பார்மஸிஸ்ட்) பணிபோட்டி தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0424-2275860, 9499055943 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

Similar News

News April 16, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

image

வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக மகுடேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 16, 2025

பவானியில் பாலியல் தொழில் ! 

image

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில்  தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!