News December 30, 2025

பாரூர் பெரிய ஏரியில் மீன்பாசி குத்தகை – ஆன்லைன் ஏலம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கான இணையவழி ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 5, 2026 காலை 9:00 மணிக்குள் www.tntenders.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

Similar News

News January 3, 2026

கிருஷ்ணகிரியில் அடிக்கடி கரண்ட் கட்டா?

image

தமிழகத்தில் மின் நுகர்வோரின் புதிய மின் இணைப்பு, மின் தடை உள்ளிட்ட 37 விதமான புகார்களை நிவர்த்தி செய்ய ‘மின்னகம்’ என்ற சேவை மையம் செயல்படுகிறது. இதுவரை பல லட்சம் புகார்கள் பெறப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மையத்தை 9498794987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகாரளிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News January 3, 2026

ஓசூரின் ‘காதல் கோட்டை’ பற்றி தெரியுமா?

image

சேலம் கலெக்டராக இருந்த பிரெட், தன் மனைவிக்காக 1864ல் ஓசூரில் கோட்டை ஒன்றை கட்டினார். இந்த கோட்டையை கட்ட அரசு பணத்தை எடுத்ததற்காக பிரட் பதவி பறிக்கப்பட்டது. 1871ல் பிரட், மாளிகையை சென்னை மாகாண அரசுக்கு விற்று, லண்டனுக்கு திரும்பினார். 1937-ல் ஏலம் விடப்பட்ட இந்த கோட்டை சூறையாடப்பட்டு, தற்போது அகழி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால், கடைசி வரை பிரட்டின் மனைவி இந்த கோட்டைக்கு வரவில்லை என்பது சோகமான ஒன்று.

News January 3, 2026

கிருஷ்ணகிரியில் மனநல கண்காணிப்பு குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவுபெற்ற மனநல மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்கள் குறித்த கண்காணிப்பு கூட்டம் நேற்று (ஜன.2) மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நேற்று(ஜன.2) நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், உள் நோயாளிகள் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!