News March 19, 2024

பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் தலைமையில் இன்று பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 6, 2025

புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

image

புதுச்சேரி மக்களே, இந்தியா முழுவதும் பொறியாளர்கள், அதிகாரிகள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு BE / B.Tech டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 6, 2025

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பிறந்த நாள் விழா

image

புதுச்சேரி, மறைந்த முன்னாள் கவர்னர் பரூக் மரைக்காயரின் பிறந்தநாள் விழா, புதுச்சேரி வைசியால் வீதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

News September 6, 2025

தொலைக்காட்சி பத்திரிகையாளர் அறிமுக விழா

image

புதுச்சேரி காரைக்கால் அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த உயிரிழந்த பத்திரிகையாளர் திரு உருவ படத்திற்கு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மேலும் பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!