News August 6, 2025
பாரதி இளைஞர் விருது; மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டின் பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நேற்று கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கோ.இளவரசன் மற்றும் தனியார் கல்லூரியின் மாணவி கற்பகரட்சாம்பிகை என்பவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
Similar News
News August 17, 2025
விநாயகா் சிலை குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார். மேலும், களி மண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தியுள்ளார்.
News August 17, 2025
பெரம்பலூர்: மக்களே உஷாரா இருங்க! எச்சரிக்கை..

பெரம்பலூர்: ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
News August 17, 2025
பெரம்பலூர்: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!