News January 17, 2026
பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.
Similar News
News January 28, 2026
விஜய் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார்: அப்பாவு

வட இந்தியாவில் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க ஒவைசியை பாஜக பயன்படுத்துவது போல, தமிழகத்தில் சிறுபான்மையினர் & திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க விஜய்யை பாஜக பயன்படுத்துவதாக அப்பாவு கூறியுள்ளார். விஜய்யும் – மோடியும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம் இது என்ற அவர், திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலில் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 28, 2026
திமுகவிடம் விசிக வைத்த புது டிமாண்ட்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தீவிரமாய் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் திமுகவிடம், 2 இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்குமாறு விசிக கேட்பதாக பேசப்பட்டது. இதற்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளவில்லையாம். எனவே, 2 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவில்லை எனில் 1 ராஜ்யசபா சீட் கொடுக்குமாறு புதிய டிமாண்ட் ஒன்றை விசிக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 28, 2026
பிப்.1-ல் டாஸ்மாக் விடுமுறை.. அரசு முக்கிய அறிவிப்பு

வள்ளலார் நினைவு நாளையொட்டி பிப்.1-ம் தேதி (வரும் ஞாயிறு) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர். அதில், அரசின் உத்தரவை மீறி யாரேனும் கடையை திறந்தாலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


