News August 7, 2025
பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தென்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 10 மீனவர்களை கைது செய்தனர். இதைக் கண்டித்து, மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்யக் கோரி, பாம்பன் மீனவர்கள் இன்று, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 8, 2025
பாம்பன் பகுதி மீனவர்களுக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் ஆக. 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News August 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஆகஸ்ட் 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 7, 2025
ராம்நாடு: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <