News September 12, 2024
பாம்பன் புதிய பாலம் அக்டோபரில் திறப்பு.?

மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 22 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க இருக்கிறது. முன்னதாக, அக்டோபரில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தார்.
Similar News
News August 15, 2025
ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம்

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறப்பு ரயில் ஓட்டம் நடைபெற உள்ளதால் ரயில்பாதையை யாரும் கடக்க கூடாது எனவும் 25000 மின்னழுத்த பாதையில் யாரும் நீண்ட கம்பு உலோகங்களாலான பொருட்களை அருகே கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே தெற்கு வாரியம் அறிவித்துள்ளது.
News August 14, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
News August 14, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு ஆக. 29 வரை நீதிமன்ற காவல்