News September 12, 2025
பாம்பன் பால ரயில் மின் பாதை நாளை ஆய்வு

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே ரயில் புதிய மின் பாதையில் சிறப்பு ரயில் இயக்கி தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் நாளை (செப்.13) ஆய்வு செய்ய உள்ளார். நாளை காலை 10:15 மணிக்கு துவங்கும் இந்த ஆய்வு மதியம் 1:45 மணியளவில் நிறைவடைகிறது. இக்கால கட்டத்தில் பாதுகாப்பு கருதி தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கவோ, அருகிலோ செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News September 12, 2025
பரமக்குடியில் நிற்குமா வெளிமாநில ரயில்

பரமக்குடி ரயில் நிலையம் வணிக, கல்வி, சுற்றுலா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய நிலையமாக இருந்தும், வெளிமாநில விரைவு ரயில்கள் இங்கு நிற்கவில்லை. ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா, மங்களூர், கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் பரமக்குடியில் நிறுத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 12, 2025
ராமநாதபுரம்: ஆபத்தில் உதவும் முக்கிய எண்

ராமநாதபுரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
இனிமேல் ராமநாதபுரம் டூ மைசூரு போரது சுலபம்

ராமநாதபுரம்-மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மைசூருவிலிருந்து ராமநாதபுரத்திற்கு செப்.,15 முதல் அக்.,27 வரை திங்கள் கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மாண்டியா, பெங்களூரு, ஓசூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக இயக்கப்படும்.மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். SHARE IT