News October 25, 2024
பாம்பனில் நவ.20க்குள் புதிய ரெயில் பாலம் திறப்புவிழா

பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்.30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன் பின் நவ.20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க அரியாங்குண்டில் தனியார் பள்ளி மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
ராமநாதபுரத்தில் கஞ்சா வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ் – எஸ்பி தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 306 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 190 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடத்த முயன்ற 185 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. மேலும், 152 வழக்குகளில் 747 கிலோ கஞ்சா மே16 அன்று அழிக்கப்பட்டதாக எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
News August 11, 2025
ராமநாதபுரம்: வீட்ல கரண்ட் இல்லையா.? இத பண்ணுங்க

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News August 11, 2025
ராமநாதபுரம்: உங்கள் வீட்டில் பசு மாடு இருக்கிறதா..! – ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் யூனியன்களில் உள்ள ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து தீவனம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.