News September 5, 2024
பாமக மேற்கு மாவட்ட செயலாளர் நியமனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நியமனம் செய்யப்பட்டார். கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தன்னை நியமன செய்ததற்கு நன்றி தெரிவித்த பின்பு, வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற அரும்பாடுபடுவேன் என்றும் கூறினார்.
Similar News
News August 24, 2025
பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
News August 24, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 24, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆக.27- ஆம் தேதி முதல் செப்.02- ஆம் தேதி வரை சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671) கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.