News November 28, 2024
பாமக மாநில துணைத் தலைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி இன்றி கூடி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு பாமக மாநில துணைத்தலைவர் ஹரிகரன் மற்றும் ரவி, ஷாஜி, ராஜ்குமார் உட்பட 4 பேர் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Similar News
News August 6, 2025
குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News August 6, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
News August 5, 2025
பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்

குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் சுகாதார பணியாளர்களுக்கு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குடோனில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.