News June 27, 2024

பாமக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் பொன்முடி

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது பாமக டெபாசிட் இழப்பது உறுதியாகிவிட்டது என அமைச்சர் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

திண்டிவனத்தில் இளம் பெண் பரிதாப பலி!

image

திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கொசல்யா (34) என்பவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரை மீட்டு குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

விழுப்புரம்: மாமியார் அடித்து கொலை.. மருமகன் கைது

image

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி. இவர், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பாவந்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற போது மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா ஆத்திரத்தில் மீனாவைத் தாக்கிய போது அதை தடுக்க சென்ற மாமியார் தனலட்சுமி தலையில், தாக்கிய நிலையில் மயங்கி விழுந்தார். தனலட்சுமி உயிரிழந்த நிலையில் சிவாவை கைது செய்தனர்.

News February 8, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!