News October 26, 2025
பாமக சார்பில் போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்தப் போராட்டம் இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும், எனவே தமிழக அரசு உடனடியாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறினார்.
Similar News
News October 26, 2025
சேலம்: அரசு ஐ.டி.ஐ.,யில் சேர ஆட்சியர் அழைப்பு!

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
News October 26, 2025
சேலம்: B.E / B.Tech டிகிரி போதும் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 26, 2025
சேலம்: பிறப்பு/இறப்பு சான்றிதழ் இனி FREE!

பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான சான்றிதழ்கள் பெற மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறப்பு தகவல் மற்றும் சேவை மையம் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வலைதளத்தில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துதரப்படும் என ஆணையாளர் இளங்கோவன் அறிவிப்பு!SHAREit


