News November 10, 2025
பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.
Similar News
News April 3, 2026
மாம்பழத்திற்கு எதிராக களமிறங்கும் G.K.மணி மகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., – பாமக இடையே 3 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில், பாமகவின் பாடி செல்வத்தை எதிர்த்து காங்., சார்பில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் களமிறங்குகிறார். மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து காங்., சின் ஜமால் யூனுஸ் முகமது, சோளிங்கரில் சரவணனை எதிர்த்து முனிரத்னம் மோத இருக்கின்றனர்.
News April 3, 2026
இந்தியாவின் இளம் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பசி, தூக்கம் மறந்து நாட்டுக்காக தன்னலமற்று சேவையாற்றுபவர்கள் ஏராளம். அவர்களில் ஒரு மக்கள் நாயகனை இந்தியா இழந்துள்ளது. சிக்கிம் எல்லையில் பணியில் இருந்த உத்தரகாண்டை சேர்ந்த இளம் ராணுவ வீரர் விகாஷ் குமார்(24) இன்று காலமானார். ராணுவ மரியாதையுடன் அவரது உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரை போன்றவர்களின் தியாகம் என்றுமே போற்றுதலுக்குரியது. GREAT SALUTE
News April 3, 2026
5 சிட்டிங் MLA-க்களை கழற்றிவிட்ட காங்கிரஸ்

17 சிட்டிங் MLA-க்களில் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ள காங்கிரஸ், 5 பேரை கழற்றிவிட்டுள்ளது. குளச்சல் MLA பிரின்ஸ், தென்காசி MLA பழனி, மயிலாடுதுறை MLA ராஜ்குமார், உதகை MLA கணேஷ், விருத்தாசலம் MLA ராதாகிருஷ்ணனுக்கு தேர்தலில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>


