News September 13, 2025
பாமகவில் இருந்து உருவான புதிய கட்சிகள்

அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவர் புதிய கட்சியை தொடங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், பாமகவுக்கு தலைவர் நானே என அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கெனவே, பாமகவில் இருந்து பிரிந்தவர்கள் புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். பிரிந்து சென்றவர்களும், அவர்கள் தொடங்கிய கட்சி குறித்தும் அறிய மேலே உள்ள போட்டோவை Swipe செய்யவும்.
Similar News
News September 13, 2025
BCCI புதிய தலைவர் இவரா?

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.
News September 13, 2025
ஓய்வு பெறும் வரை ‘O’ மட்டும் தான்: EPS தாக்கு

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ‘ஓ’ (2.0, 3.0) போட்டவர் முன்னாள் டிஜிபி என EPS விமர்சித்துள்ளார். திருப்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் எப்படி போனாலும், தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என்றும் சாடினார்.
News September 13, 2025
தவெக கூட்டணி? காங்கிரஸ் தலைமை விளக்கம்

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ், 2006-ம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். மேலும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இது, 2026-ல் கூட்டணி மாற்றத்திற்கு காங்., தயாராவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?