News February 9, 2026
பாபர் அசாம் சாதனையை முறியடித்த சூர்யகுமார்

மும்பையில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் புதிய சாதனை படைத்தார். T20 உலகக் கோப்பை கேப்டன்சி அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2009-ல் ஆஸி.,வுக்கு எதிராக கிறிஸ் கெயில் 88 ரன்களுடன் முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 84 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் பாபர் அசாமின் (68 ரன்கள்) சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
ராமதாஸ் அத்வாலேவால் சீமானுக்குதான் பிரச்னையா?

நாதக என்றாலே கரும்பு விவசாயி சின்னம்தான். ஆனால் இச்சின்னம் இந்திய குடியரசு கட்சியிடம் இருப்பதால், வேறு சின்னங்களில் நாதக போட்டியிட்டது. அத்துடன் அத்வாலே கட்சி TN-ல் போட்டியிடாது, அதனால் சின்னத்திற்கு பிரச்னை இருக்காது என நாதக நம்பியிருந்ததாம். ஆனால் இம்முறை TN தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் RPI போட்டியிடும் என <<19146858>>அத்வாலே அறிவித்துள்ளதால்<<>> சீமான் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
News February 16, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹960 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை இன்று(பிப்.16) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், சவரன் ₹960 குறைந்து ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது. <<19154307>>சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின்<<>> காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
News February 16, 2026
பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!

4 நாள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரான்ஸ் தற்போது இந்தியாவின் 2-வது பெரிய பாதுகாப்பு சப்ளையராக உள்ளது. அதன்படி அவரது இப்பயணத்தில் HAMMER ஏவுகணைகளின் கூட்டு உற்பத்தி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 114 ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


