News April 2, 2026

பாபநாசம் மலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

image

பாபநாசம் அருகே காரையார் வனப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் சுகுமாரும் அங்கு சென்ற நிலையில் கோயிலுக்கு செல்லும் மலைச்சாலையில் 1 கிலோ மீட்டர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த புகைப்படங்கள் இன்று வைரலாகியுள்ளது.

Similar News

News April 9, 2026

அம்பை தொகுதியில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள்

image

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. இங்கு மொத்தம் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே மோதுகின்றனர். இதனால் இந்தத் தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது.

News April 9, 2026

நெல்லை: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 9, 2026

நெல்லை: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

error: Content is protected !!