News December 31, 2024
பாபநாசம் அருகே விபத்து – இருவர் உயிரிழப்பு

பாபநாசத்தை சேர்ந்த சக்திவேல் – பிரபாகரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வடசருக்கை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தோடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Similar News
News August 9, 2025
வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை கொள்ளை

தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தஞ்சை: புலனாய்வுத் துறையில் வேலை! ரூ.1,42,400 சம்பளம்!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <