News October 27, 2024

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 95.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.84 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.70 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணை ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Similar News

News February 7, 2026

நெல்லை: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 7, 2026

நெல்லை: பச்சிளங்குழந்தையை புதைத்த தந்தை கைது!

image

மேலப்பாளையத்தை சேர்ந்த நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு நேற்றிரவு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நசீம் உசைன் இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் இன்று நசீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 7, 2026

பாளையங்கோட்டை சிறை ஜெயிலரை தாக்கிய கைதி

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!