News October 30, 2024
பாபநாசம் அணையில் 805 கன அடி நீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் நேற்று எங்கும் மழை பொழிவு இல்லாமல் வருண்ட வானிலை காணப்பட்டது. இதனிடையே, பாபநாசம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 805 கன அடி நீர் இன்று (அக்.30) திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 95 அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் வரத்து வினாடிக்கு 427 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 105 அடியாக உள்ளது.
Similar News
News August 23, 2025
நெல்லை: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 23, 2025
நெல்லை இளைஞர்களே.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க…

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பாளை St. John’s கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் உடனே உங்கள் சுயவிபரம் (Resume), கல்விச்சான்றுகளுடன் மிஸ் செய்யாமல் கலந்து கொள்ளுங்கள். உடனே SHARE பண்ணுங்க
News August 23, 2025
நெல்லைக்கு அமைச்சர் நேரு திடீர் வருகை

நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.