News March 26, 2024
பாபநாசத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று(மார்ச் 25) நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வகுப்பில், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.
Similar News
News February 14, 2026
தஞ்சை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
தஞ்சை: தலையில் கல்லை போட்டு மனைவி கொலை!

தஞ்சை மாவட்டம், அணைக்கரை மீன் சந்தை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி அகிலா. இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசன் இரவு மது போதையில், தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டர் குழவி கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பனந்தாள் போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 14, 2026
தஞ்சாவூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் வரும் பிப்.17-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் இந்த முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


