News March 24, 2024
பாபநாசத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது…!

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள்
கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
Similar News
News August 17, 2025
தஞ்சை: ரூ.88,000 சம்பளத்தில் LIC நிறுவனத்தில் வேலை

தஞ்சை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே <
News August 17, 2025
டெல்டா – பாலக்காடு புதிய ரயில் சேவை தொடக்கம்

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளை கேரள மாநிலத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய தினசரி ரயில் சேவை மயிலாடுதுறை – பாலக்காடு இடையே தொடங்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 17, 2025
தஞ்சை மக்களே உஷாரா இருங்க! எச்சரிக்கை..

தஞ்சையில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!