News January 10, 2026

பாத்ரூமில் கணவன், மனைவி.. கோர்ட் ₹10 லட்சம் FINE

image

ராஜஸ்தான், உதய்பூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் கோர்ட். ஹோட்டலில் சென்னையை சேர்ந்த தம்பதியர் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் பாத்ரூமில் இருந்தபோது, ஹோட்டல் ஊழியர் மாற்று சாவி கொண்டு அறைக்கதவை திறந்துள்ளார். அவர்கள் குரல்கொடுத்தும் அறைக்குள் அவர் எட்டிப் பார்த்ததாக, தம்பதி தொடர்ந்த வழக்கில் தான் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதை பற்றி நீங்கள் என்ன சொல்றீங்க?

Similar News

News January 22, 2026

4 நாள்கள் தொடர் விடுமுறை

image

4 நாள்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25. (ஞாயிறு), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். இந்நிலையில், வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கக்கோரி ஜன.27-ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனால், வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்குள் முடித்துவிடுங்கள் நண்பர்களே!

News January 22, 2026

5,500 பேரை காத்த ‘ஆம்புலன்ஸ் தாதா’

image

1998-ம் ஆண்டு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கரிமுல் ஹக், தனது தாயை இழந்தார். இனி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் யாரும் தவிக்கக்கூடாது என முடிவெடுத்தவர், தனது பைக்கை சிறு ஆம்புலன்ஸாக மாற்றினார். முதலுதவி கொடுக்கும் பயிற்சி பெற்றவர், அன்று முதல் 5,500 பேரை காப்பற்றியுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த இவரை மக்கள் ‘ஆம்புலன்ஸ் தாதா’ என அழைக்கின்றனர். அவருக்கு, 2017-ல் பத்மஸ்ரீ வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.

News January 22, 2026

உலகளவில் ‘விசில்’ டிரெண்டிங்

image

சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து SM-ல், #விசில் #Whistle #WhistleforTvk #தமிழக வெற்றிக் கழகம் ஹேஷ்டேகுகளை தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் டிரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக #Whistle நம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது. அண்மைக் காலமாக சுணக்கமாக இருந்த விர்ச்சுவல் வாரியர்ஸ், சின்னம் அறிவிப்பால் SM-ல் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.

error: Content is protected !!