News January 9, 2026
பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

இன்று (ஜன.9) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM machine) பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
Similar News
News January 10, 2026
ராணிப்பேட்டை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

ராணிப்பேட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு ‘HI’ மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
ராணிப்பேட்டையில் மழையால் மின்தடையா? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!
News January 10, 2026
ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை, பெரும்புலிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜன.9) கார், வேன் என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னை பூந்தமல்லி வரதராஜபுரத்தைச் சேர்ந்த தீபக் என்ற டிரைவர் சம்பவத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


