News December 17, 2025
பாதுகாப்பற்ற அரசுப்பள்ளி கட்டடங்கள்: சீமான்

<<18583116>>திருவள்ளூரில் <<>>சுவர் இடிந்து விழுந்து மாணவன் இறந்தது, வேதனையளிப்பதாக சீமான் கூறியுள்ளார். கடந்தகால துயர்களை படிப்பினையாக கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் பள்ளிகளின் தரம் மேம்பட்டிருக்கும், ஆனால் அதை செய்யாமல் DMK அரசு அலட்சியம் காட்டியதாக அவர் சாடியுள்ளார். கார் பந்தயம், கலைஞர் அரங்கம் என பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் அரசிடம் பள்ளிகளை தரமானதாக மாற்ற நிதி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News December 17, 2025
BREAKING: கொந்தளித்தார் ஓபிஎஸ்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீண்ட நாள்களுக்குபின் OPS அறிக்கை வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான ’விக்ஷித் பாரத்’ சட்ட முன்வடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏற்கெனவே நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, இச்சட்ட முன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.
News December 17, 2025
முன்பதிவிலேயே ₹100 கோடி அள்ளிய அவதார்!

வரும் 19-ம் தேதி ரிலீசாகவுள்ள ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: Fire and Ash’ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் இரு பாகங்களும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த நிலையில், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். உலகளவில் தற்போது வரை, இப்படம் முன்பதிவில் ₹100 கோடியும், இதில் இந்தியாவில் மட்டும் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


