News February 12, 2026
பாதி சம்பளம் கூட வழங்காத தமிழக அரசு: TTV தினகரன்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி TN அரசுக்கு TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார். கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமாக ₹57,700 வழங்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதில் பாதி கூட வழங்காமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்றும், விரிவுரையாளர்களின் போராட்டாத்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News February 18, 2026
பணிய வைக்க கனவு காணும் பாஜக: வேல்முருகன்

CBI, ED போன்ற அரசு எந்திரங்களை பயன்படுத்தி அதிமுகவை பணிய வைக்க பாஜக கனவு காண்பதாக வேல்முருகன் சாடியுள்ளார். NDA-வில் CM வேட்பாளர் விவகாரத்தில் டெல்லி தலைமை EPS-ஐ அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பவர் ஷேர் விவகாரத்தில் திமுக, அதிமுக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் பவர் ஷேர் வேண்டும் என வேல்முருகன் கூறி வருகிறார்.
News February 18, 2026
வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழை அலர்ட்!

தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்பதால் மக்கள் அலர்ட்டா இருங்க.
News February 18, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. கணவர் தற்கொலை!

மனைவிக்கு தெரியாமல் சிறப்பு நிதியுதவி ₹5,000-ஐ செலவு செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், நெடுங்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன், மனைவி ராமுவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். எனவே, மனமுடைந்த ஈஸ்வரன் இம்முடிவை எடுத்துள்ளார்.


