News January 24, 2026
பாதாளச் சாக்கடையில் கொசுவலை: மேயர் விளக்கம்

சென்னையின் சில இடங்களில் பாதாளச் சாக்கடை மூடியின் அடிப்பகுதியில் <<18935030>>கொசுவலை<<>> போர்த்தியது விமர்சனத்திற்கு உள்ளானது. இது கொசுக்களுக்காக வைக்கப்பட்டது அல்ல என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஒரு கவுன்சிலரின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டது என்றும், மாநகராட்சியின் முன்னெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார். இதை இவ்வளவு சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரியா தெரிவித்தார்.
Similar News
News February 4, 2026
நாகை: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 4, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
News February 4, 2026
கில்லி, படையப்பா, மங்காத்தா: அதிகம் வசூலித்தது எது?

ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழ் சினிமாவை தொற்றிக் கொண்டுள்ளது. பல்வேறு படங்களும் ரீ-ரிலீசாகி வரும் நிலையில், எந்த படம் அதிக வசூலை அள்ளியது என தெரியுமா? ரஜினியின் பர்த்டேவை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ ₹18 கோடி வசூலை குவித்ததாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அஜித்தின் ‘மங்காத்தா’ ₹21.5 கோடி வசூலித்துள்ளதாம். 2024-ம் ஆண்டு ரீ-ரிலீசான விஜய்யின் ‘கில்லி’ கிட்டத்தட்ட ₹32 கோடி வசூலித்துள்ளதாம்.


