News January 13, 2026
பாதயாத்திரையில் சோகம்: திருப்பூர் பெண் பலி

திருப்பூரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனை தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
திருப்பூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம், 0421-2478500 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 26, 2026
திருப்பூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

திருப்பூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
திருப்பூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<


