News August 10, 2025
பாடியநல்லூர் மருத்துவ முகாமில் அமைச்சர் பங்கேற்பு

பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக நலத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, இலவச கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை துவக்கி வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.
Similar News
News August 10, 2025
திருவள்ளூரில் நோய்களைத் தீர்க்கும் வீரராகவர்

திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான வீரராகவப் பெருமாள், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் “வைத்தியர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு வழங்கப்படும் நெய், பால் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதத்தை உட்கொண்டால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!
News August 10, 2025
திருவள்ளூர்: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
News August 10, 2025
திருவள்ளூரில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்!

▶️ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
▶️ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில்
▶️வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில்
▶️பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம்.
▶️அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி
▶️தேவி கருமாரி அம்மன் திருக்கோயில். இவை எல்லாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களாகும். இதை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!