News January 22, 2026
பாடகி ஜானகியின் மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தாய் இருக்கும்போதே மகன் இறப்பது பெரும் சோகம். தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு பாடகி ஜானகி கண்ணீரில் மூழ்கியுள்ளார். நடிகரும், நடன கலைஞருமான <<18924063>>முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு<<>> பாடகி சித்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் நடைபெற்றுவரும் அவரது இறுதிச் சடங்கில், கலந்து கொண்டு ஜானகிக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News January 30, 2026
CONCERT போல கூட்டம் நடத்துகிறார் விஜய்

ஒரு நடிகராக சமூகத்தை விட்டு விலகியிருக்க முடியும்; ஆனால், அரசியலுக்கு வந்த பிறகும் அதே போக்கை தொடரலாம் என விஜய் நினைப்பது சரியல்ல என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனியார் TV நிகழ்ச்சியில் பேசிய அவர், Concert நடத்துவது போல கூட்டங்களை நடத்திவிட்டு, மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புவது தவறு; தவெகவுக்கு வாக்குகள் கிடைக்கும்; ஆனால், வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. வந்தாச்சு அப்டேட்

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவர்களுக்கு பிப்ரவரி சற்று சோதனையான காலம். அரசு நாள்காட்டிப்படி, தைப்பூசம்(பிப்.1) நாளில் மட்டும் அரசு விடுமுறை. அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. மற்றபடி, வார விடுமுறையான 8 நாள்கள் (பிப். 1, 7, 8, 14, 15, 21, 22, 28) மட்டுமே விடுமுறை. பிப்ரவரியில் 28 நாள்கள்தான் என்பதால், மற்ற 20 நாள்கள் பள்ளிகள் இயங்கும். SHARE IT.
News January 30, 2026
BREAKING: கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

2026 தேர்தலையொட்டி அதிரடியான வாக்குறுதிகளை EPS அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, குலவிளக்கு திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000, பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ₹25,000 மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தற்போது அவர் அறிவித்துள்ளார்.


