News March 24, 2024

பாஜக வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுவை பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் நாளை(25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் (ம) தொண்டர்கள் கருவடிக்குப்பம் சித்தானந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆதரவாளர்கள் உடன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News November 29, 2025

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பேட்டி

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் கொடுத்து உள்ளார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது, பொதுமக்கள் மழையில் தேவையில்லாமல் நாளை, நாளை மறுநாளும் வெளியில் வர வேண்டாம் என்றும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

News November 29, 2025

புதுவை துறைமுகத்தில் 4-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது

image

தென்மேற்கு வங்கக்கடலில், டிட்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும், இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புயல் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News November 28, 2025

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

image

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு லேசான காது வலி ஏற்பட்டது, இதனையடுத்து அவர் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அனுப்பினர். மேலும் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், துணைநிலை ஆளுநர் சிகிச்சை பெற்று சென்றது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

error: Content is protected !!