News January 18, 2026
பாஜக மூத்த தலைவர் ராஜ் கே.புரோஹித் காலமானார்

BJP மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநில EX அமைச்சருமான ராஜ் கே.புரோஹித்(70) உடல் நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்ட இவர், அமைச்சர், பாஜகவின் தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் இவரது மகன் ஆகாஷ் வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்பை பார்ப்பதற்குள் மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 1, 2026
மாநிலங்களுக்கு ₹1.4 லட்சம் கோடி அறிவிப்பு

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும் என FM நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும், 2026-27 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ₹1.4 லட்சம் கோடி வழங்கப்படும் எனவும் இதில் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி, பேரிடர் மேலாண்மைக்கான மானியங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உயர்த்தப்படாததால் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
News February 1, 2026
FLASH: ஜாம்பவானை வீழ்த்தி சாம்பியனான அல்காரஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்னிஸ் ஜாம்பவானான ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்காரஸ் முத்தமிட்டார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. நீங்களும் வாழ்த்தலாமே!
News February 1, 2026
அரசு மாதிரிப் பள்ளிகளில் நாளை முதல் அட்மிஷன்

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் இம்மாதம் 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


