News April 13, 2025
பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று நெல்லைக்கு வருகை தந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு, பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் மலர்தூவி வரவேற்றனர். பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாநில அணி பிரிவு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Similar News
News April 15, 2025
நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

நெல்லையில் வரும் ஏப்.17 வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. நெல்லை மாநகர பகுதியில்
மத்திய அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிய நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. அரசு துறையில் ஓய்வு பெற்ற,
வங்கி அலுவலர்கள் இல்லத்தரசிகள்
கல்வி மற்றும் தனியார்த்துறை யில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி :SSLC, +2, Any Degree, தொடர்பு கொள்ளவும்: 73587 39939
News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

நெல்லை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
News April 15, 2025
முன்னீர்ப்பள்ளம் அருகே ஆட்டோ மோதி மூதாட்டி பலி

தருவை பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் மீது நேற்று (ஏப்-14) ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என முன்னீர்ப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.