News November 24, 2024

பாஜக பிரமுகர் கொலையில் வாலிபர் கைது

image

பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்த பாளை மூலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன் கடந்த ஆண்டு ஆக.30 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் இருப்பதால் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். இதில் அஜித் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால் தலைமறைவாக இருந்த அஜித்குமார் இன்று கைது செய்தனர்.

Similar News

News January 20, 2026

நெல்லை மாவட்டத்தில் நாளைய மின்தடை

image

நெல்லை மாவட்த்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக நாளை(ஜன.21) மின்தடை செய்யப்படவுள்ளது. சேரன்மகாதேவி துணைமின் நிலையம், கரிசல்பட்டி துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், பரப்பாடி மின் நிலையம், நவலடி துணை மின் நிலையம், சங்கன்குளம் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. *ஷேர் பண்ண மறக்காதீங்க

News January 20, 2026

ஊர்க்காவல் படையினர் மூலம் புதிய திட்டம் தொடக்கம்

image

நெல்லை மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், ஊர்க்காவல் படையினரை அந்த பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தும் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது முதல் முறையாக முழுமையாக இந்த பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News January 20, 2026

நெல்லை: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

நெல்லை மக்களே.., உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!