News April 14, 2024
பாஜக பிரமுகருக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி ஏப்.6 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சதீஷ், நவீன்,பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் ரூ.1 கோடி கைமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தொழிற்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.
Similar News
News December 22, 2025
செங்கல்பட்டு: பைக் விபத்தில் வாலிபர் பலி!

திம்மாவரத்தைச் சேர்ந்த நவீன் (20), நேற்று டிச-20 இரவு தனது நண்பர் தீபக் (18) என்பவருடன் பைக்கில் காஞ்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்தூர் பழத்தோட்டம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன் உயிரிழந்த நிலையில், தீபக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 22, 2025
செங்கல்பட்டு: 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சிங்கபெருமாள் கோவில் அருகே, கடந்த மாதம் ஆகாஷ் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முத்துவீரா, விக்கி, மாரியப்பன், கோபி மற்றும் சந்தோஷ் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், இதற்கான ஆணை நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழங்கினர்.
News December 22, 2025
சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா; விஜய் பங்கேற்பு

மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை10:30 மணியளவில் மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


