News March 20, 2025

பாஜக நிர்வாகி மூச்சு திணறலால் உயிரிழப்பு

image

மதுரை, செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கருப்பசாமி நேற்று காலை கூடல் நகர் அருகே மர்மமான முறையில் காரில் உயிரிழந்து கிடந்தார். அவர் எப்படி உயிர் இழந்தார் என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில் தற்போது அவரது மரணத்திற்கு மூச்சுதிணறல் தான் காரணம் என உடற்கூராய்வில் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 15, 2025

அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

image

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 15, 2025

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை

image

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு M.Sc, ME/M.Tech, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை தகுதிகேற்ப மாத ஊதியம்வழங்கப்படும். இங்கு <>கிளிக் <<>>செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 15, 2025

மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க

error: Content is protected !!